தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டம்?

மே 10 ஆம் தேதி தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றங்கள் மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி தொழில்துறை அமைச்சராக இருக்கும் தங்கம் தென்னரசுவை நிதித்துறைக்கு அமைச்சராக்கவும், நிதியமைச்சராக இருக்கும் பிடிஆர் பழனிவேல்…

மே 10 ஆம் தேதி தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றங்கள் மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி தொழில்துறை அமைச்சராக இருக்கும் தங்கம் தென்னரசுவை நிதித்துறைக்கு அமைச்சராக்கவும், நிதியமைச்சராக இருக்கும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை தகவல் தொழில்நுட்ப துறைக்கு அமைச்சராக்கவும், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருக்கும் மனோ தங்கராஜை பால்வளத்துறைக்கு அமைச்சராக்கவும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ஒரு அமைச்சரை விடுவித்து, மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் டி.ஆர்.பி. ராஜாவுக்கு தொழிற்துறை இலாகா வழங்க ஆலோசிக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அதேபோல், முதலமைச்சரின் தனிச்செயலாளர், அரசின் முக்கியத் துறைகளை நிர்வகிக்கும் செயலாளர்கள் மட்டத்தில் மாற்றங்கள் மேற்கொள்வது தொடர்பான அறிவிப்புகளும் வெளியாக உள்ளது.

இதையும் படியுங்கள் : ஐபிஎல் 2023 : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 180 ரன்கள் இலக்கு!

தனது அமைச்சரவையில் முதலமைச்சர் மாற்றங்கள் மேற்கொள்ளவுள்ளதாக அவ்வவ்போது தகவல் வெளியாகி வந்தாலும், அவை தள்ளிவைக்கப்பட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.