முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்த நாளையொட்டி, அரசியல் கட்சியினர் பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளையொட்டி, அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் கூறிவருகின்றனர். பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, மநீம தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோரும், நடிகர் ரஜினிகாந்த், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட திரைப் பிரபலங்களும் முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று 70வது பிறந்த நாள் காணும், தமிழக முதல்வர் , திமுக தலைவர், அன்பு சகோதரர் மு.க.ஸ்டாலின் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் பல்லாண்டுகள் வாழ்ந்து மக்கள் சேவையாற்ற இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இன்று 70வது பிறந்த நாள் காணும், தமிழக முதல்வர் , திமுக தலைவர், அன்பு சகோதரர் திரு. மு. க. ஸ்டாலின் @mkstalin அவர்கள், நல்ல உடல் ஆரோக்கியத்துடன் பல்லாண்டுகள் வாழ்ந்து மக்கள் சேவையாற்ற இறைவனை பிரார்த்திக்கிறேன்.#MKStalin70 pic.twitter.com/jFkWHaPG7p
— Vijayakant (@iVijayakant) March 1, 2023
அதேபோல, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இன்று 70-ஆம் பிறந்தநாள் காணும் தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது பொதுவாழ்வு பணி தொடர வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இன்று 70-ஆம் பிறந்தநாள் காணும் தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது பொதுவாழ்வு பணி தொடர வாழ்த்துகிறேன்.@CMOTamilnadu
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) March 1, 2023
-ம.பவித்ரா