தஞ்சை துணை மேயர் அஞ்சுகம்பூபதி – வெற்றிகுமார் தம்பதியின் ஆண் குழந்தைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருணாநிதி என்று பெயர் சூட்டியுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் அஞ்சுகம் பூபதி நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 51வது வார்டில் போட்டியிட்டார். அப்போது அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோதிலும் தேர்தல் பணிக்காக சுறுசுறுப்பாக வேலைசெய்தார். தொடர்ந்து வாக்களர்களை நேரில் சந்தித்து திமுக ஆட்சியின் சாதனைகளை மகக்ளுக்கு எடுத்துரைத்தார். அப்போது எடுக்கப்பட்ட அவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டது.
கர்ப்பிணியாக இருந்தபோதும் அவரது அயராத உழைப்பு வாக்காளர்கள் மத்தியில் பெரும் கவனம் ஈர்த்தது. இந்த நிலையில் 19ம் தேதி நடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். தொடர்ந்து தஞ்சாவூர் மாநகராட்சியின் துணை மேயராக அவர் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த நிலையில் கடந்த 12ம் தேதி அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில் அவரது குழந்தைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சந்தித்து அவரது குழந்தைக்கு கருணாநிதி என பெயர் சூட்டினார். இது குறித்து தனது ட்விட்டர் பதிவில், “எங்கள் குழந்தைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு தளபதி அவர்கள் சற்று முன் கருணாநிதி என பெயர் சூட்டினார். எங்கள் குடும்பத்தின் சார்பில் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து மகிழ்கிறோம். நன்றி” என்று நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.







