காமராஜரின் பிறந்தநாளில் மரியாதை செலுத்திய முதலமைச்சர் மு.க ஸ்டாலின்!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கர்ம வீரர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவரது திருவுருப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15 ஆம் நாளை…

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கர்ம வீரர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவரது திருவுருப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15 ஆம் நாளை கல்வி வளர்ச்சி நாளாக தமிழ்நாடு  அரசு அறிவித்து கொண்டாடி வருகிறது. இந்நாளில் பள்ளிகளில் காமராஜர் திருவுருவப் படத்தினை அலங்கரித்து  கொண்டாட ஏற்பாடுகள் செய்ய வேண்டும்  என பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஒவ்வொரு பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் காமராஜரின் திருவுருப்படத்திற்கு  பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாடு அரசு சார்பாக  சென்னை நங்கநல்லூர் நேரு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின்  காமராஜரின்  உருவப்படத்திற்கு  மலர்தூவி மரியாதை செலுத்தினார் . இந்நிகழ்ச்சியில்,  அமைச்சர்கள் பொன்முடி, தா மோ அன்பரசன், அன்பில் மகேஸ், உள்ளிட்டோர் உடன் பங்கேற்றனர்.
இந்த விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் தனக்கு வழங்கப்பெற்ற 7,740 புத்தகங்களை தமிழ்நாடு அரசின் பொது நூலகங்களுக்கு வழங்கினார்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.