குடியரசுத் தலைவரை சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேற்று இரவு எட்டு முப்பது மணிக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், டெல்லி செல்ல இருந்த நிலையில் சரியாக 8: 20 மணிக்கு ஆறாம் நம்பர் கேட்டிற்கு வந்த முதலமைச்சர் டெல்லி செல்ல தயாராக இருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது ஏர் இந்தியா விமானத்தின் இன்ஜினில் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. அதனை அடுத்து 317 பயணிகளுடன் டெல்லி செல்ல இருந்த விமானம் ரத்து செய்யப்பட்டதாகச் சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் டெல்லி செல்ல முடியாமல் பயணத்தை ரத்து செய்து வீடு திரும்பினார் மு க ஸ்டாலின். இதையடுத்து, இன்று காலை வேறு விமானத்தில் அவர் டெல்லி புறப்பட்டு சென்றார். காலை 11 மணிக்கு குடியரசுத் தலைவரை சந்திக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை கிண்டி பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்துகொள்ள அழைப்பிதழ் வழங்குகிறார்.