‘அன்புக்கரங்கள்’ திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

கலைவாணர் அரங்கத்தில் ‘அன்புக்கரங்கள்’திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசின் ‘தாயுமானவர்’ திட்டத்தின் ஒரு பகுதியாக, பெற்றோா் இருவரையும் இழந்த மற்றும் பெற்றோரில் ஒருவரை இழந்து மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளை பாதுகாக்கும் வகையில், ‘அன்புக்கரங்கள்’ திட்டம் தொடங்கப்படும் என்று தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது.

இத்திடத்தின் மூலம், அந்தக் குழந்தைகள் 18 வயது வரை இடைநிற்றல் இன்றி கல்வியைத் தொடர, மாதம் ரூ. 2,000 உதவித் தொகை வழங்கப்படும். அது மட்​டுமின்​றி, பள்​ளிப் படிப்பை முடித்த பிறகு கல்​லூரிக் கல்வி மற்​றும் உரிய திறன் மேம்​பாட்டு பயிற்​சிகளும் அவர்​களுக்கு வழங்​கப்​படும்.

இந்த நிலையில், சென்னை, கலைவாணர் அரங்கத்தில் இத்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, குழந்தைகளுக்கு உதவித் தொகையை வழங்கினார். மேலும், பெற்றோர் இருவரையும் இழந்து பிளஸ் 2 வகுப்பு முடித்து, பல்​வேறு உயர்​கல்வி நிறு​வனங்​களில் தமிழ்நாடு அரசின் முயற்​சி​யால் சேர்க்​கப்​பட்​டுள்ள மாணவர்களுக்கு மடிக்கணினிகளையும் வழங்கினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.