”ஜெயிலர்” படத்தை பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்… நெகிழ்ச்சியில் நெல்சன்…

ரஜினிகாந்த் நடித்து வெளியான “ஜெயிலர்” திரைப்படத்தை பார்த்துவிட்டு, நேரில் வாழ்த்துக்கள் கூறிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இயக்குனர் நெல்சன் திலீப் குமார் நன்றி தெரிவித்துள்ளார். நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர்…

ரஜினிகாந்த் நடித்து வெளியான “ஜெயிலர்” திரைப்படத்தை பார்த்துவிட்டு, நேரில் வாழ்த்துக்கள் கூறிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இயக்குனர் நெல்சன் திலீப் குமார் நன்றி தெரிவித்துள்ளார்.

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. தமிழ்நாட்டை பொறுத்தவரை 900-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது.  உலகம் முழுவதும் 4000-க்கும் அதிகமான திரையரங்குகளில் இப்படம் வெளியானது.

ரஜினிகாந்த் மற்றும் ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடித்த “படையப்பா” திரைப்படம் பெரிய வரவேற்பு பெற்று இன்று வரை பேசப்படுகிறது. 24 ஆண்டுகளுக்கு பின் “ஜெயிலர்” திரைப்படத்தில் ரஜினி மற்றும் ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், தென்னிந்திய முன்னணி நடிகர்களான மோகன்லால், சுனில், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, யோகிபாபு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து இந்த படம் உருவாகி உள்ளது. ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார்.

முதல்நாளில் தமிழகத்தில் ரூ.29.46 கோடியையும் ஆந்திரம் மற்றும் தெலுங்கானாவில் ரூ.12.04 கோடியையையும் கர்நாடகத்தில் ரூ.11.92 கோடி, கேரளத்தில் ரூ.5.38 கோடி, வெளிநாடுகளில் ரூ.32.75 கோடி என ஒட்டுமொத்தமாக உலகளவில் இப்படம் ரூ.95.78 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

https://twitter.com/Nelsondilpkumar/status/1689985270442045440

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “ஜெயிலர்” படத்தை பார்த்துவிட்டு, இயக்குனர் நெல்சன் திலீப் குமாருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வை இயக்குனர் நெல்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர் முதலமைச்சருடம் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, “ஜெயிலர் படத்தை பார்த்ததற்கு முதலமைச்சருக்கு மிக்க நன்றி. உங்களின் பாராட்டுக்கும் ஊக்கத்திற்கும் நன்றி. நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் உங்கள் வார்த்தைகளால் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்.” இவ்வாறு பகிர்ந்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.