தமிழ்நாட்டிற்கு 38 டி.எம்.சி தண்ணீரை திறந்துவிடுமாறு கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம், ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு சார்பில், நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியம் கலந்து கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இக்கூட்டத்தில் பேசிய நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு முழுமையான அளவில் காவிரியிலிருந்து தண்ணீர் திறக்கவில்லை என்றும், காவிரியில் இருந்து உரிய நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். தமிழகத்திற்கு தர வேண்டிய 37.9 டிஎம்சி காவிரி நீரை திறந்துவிட கர்நாடகா மறுப்பு தெரிவித்ததால், கூட்டத்தில் இருந்து தமிழ்நாடு பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்தனர்.
இதனையடுத்து சுமார் மூன்றரை மணி நேரம் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு 38 டி.எம்.சி தண்ணீரை திறந்துவிடுமாறு கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டது.