முக்கியச் செய்திகள் தமிழகம்

சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம்; குவிந்த புகார்கள்

சிதம்பரம் நடராஜர் கோவில் விசாரணைக்குழுவிடம் 645 மனுக்கள் நேரிலும் மின்னஞ்சல் மூலமாக 3461 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலை பொது தீட்சிதர்கள் நிர்வாகம் செய்து
வருகின்றனர். இந்த கோவில் வரவு-செலவு கணக்குகளை காட்ட வேண்டும் என்றும், 2
நாட்கள் ஆய்வு செய்வோம் என்றும் தீட்சிதர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை
அதிகாரிகள் கொண்ட குழுவினர் நோட்டீஸ் வழங்கினர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த 7, 8-ந்தேதிகளில் ஆய்வு செய்ய வந்த சிறப்பு
அதிகாரி சுகுமாறன் தலைமையிலான குழுவுக்கு தீட்சிதர்கள் ஒத்துழைக்காமல் வரவு-
செலவு கணக்குகளையும் காண்பிக்கவில்லை. மாறாக நீங்கள் சட்ட ரீதியான குழு இல்லை
என்றும், உச்சநீதிமன்ற உத்தரவு படி அமைக்கப்பட்ட குழுவாக இருந்தால் வரவு- செலவு
கணக்குகளை ஒப்படைப்போம். இல்லையென்றால் வரவு-செலவு கணக்குகளை காட்ட முடியாது என்று தீட்சிதர்கள் மறுத்து விட்டனர்.

இதனால் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் குழுவினர், இது பற்றி ஆணையரிடம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாக கூறி சென்றனர். இதற்கிடையில் சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம் குறித்து விசாரணை நடத்த இன்று மற்றும் நாளையும் பொதுமக்கள் ஆலோசனை மற்றும் கருத்து கூறலாம் என்று இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் ஜோதி அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

கடலூர் புதுப்பாளையம் ஆற்றங்கரை தெருவில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் உள்ள துணை ஆணையரிடம் தெய்வத்தமிழ்பேரவை கூட்டமைப்பு, காங்கிரஸ் கட்சி மூத்த துணைதலைவர் ராதாகிருஷ்ணன், தீட்சிதர்களின் தீண்டாமை என மக்கள் அதிகாரம் சார்பில் 1 லட்சம் கையெழுத்து பெற்று உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் அளிக்கப்பட்டது. அதன்படி விசாரணைக்குழு கருத்து கேட்பதற்காக இன்று மட்டும் இந்து அறநிலையத்துறை அலுவலகத்தில் 645 மனுக்கள் நேரிலும் மின்னஞ்சல் மூலமாக 3,461 மனுக்கள் பெறப்பட்டதாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

டிசம்பரில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்?

Halley Karthik

மனைவி கழுத்தை அறுத்து கொலை முயற்சி; கணவன் கைது

Halley Karthik

மழை வெள்ளத்தால் மிதக்கும் வடமாநிலங்கள்: படகில் செல்லும் மக்கள்

Niruban Chakkaaravarthi