இந்தியாவின் ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட திரைப்படமானசெலோ ஷோ திரைப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்த நடிகர் ராகுல் கோலி, 17 வயதில் இரத்தப் புற்றுநோயான லுகேமியாவுடன் போராடி துரதிர்ஷ்டவசமாகக் காலமானார்.
நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான அகாடமி விருதுகளுக்கான இந்தியாவின் படங்களின் சார்பில் குஜராத்தி திரைப்படமான செலோ ஷோ என்ற திரைப்படம் தேர்வாகியுள்ளது. பான் நாலின் என்பவர் இயக்கியுள்ள இப்படத்தில் பவின் ரபாரி, பவேஷ் ஸ்ரீமாலி, ரிச்சா மீனா, டிபன் ராவல் மற்றும் பரேஷ் மேத்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் நியூயார்க் நகரில் நடைபெற்ற ட்ரிபேக்கா திரைத் திருவிழாவில் சர்வதேச திரைப்படப் பிரிவில் இப்படம் முதன்முதலில் திரையிடப்பட்டது. இந்தியத் தரப்பில் காஷ்மீர் ஃபைல்ஸ் அல்லது ஆர்ஆர்ஆர் திரைப்படம் தான் ஆஸ்கர் 2023 தேர்வுப் பட்டியலில் இடம்பெறும் எனப் பரவலாகப் பேசப்பட்டது. ஆனால் செலோ ஷோ திரைப்படம் தேர்வாகி இருப்பதால் இப்படம் குறித்த பேச்சே தற்போது இணையத்தில் வலம் வந்த வண்ணமாக உள்ளது.
இந்நிலையில் இத்திரைப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்த நடிகர் ராகுல் கோலி, 17 வயதில் இரத்தப் புற்றுநோயான லுகேமியாவுடன் போராடி துரதிர்ஷ்டவசமாகக் காலமானார். இந்த ஆண்டு தொடக்கத்தில் ராகுலுக்கு உடலின் இரத்த புற்றுநோய் கண்டறியப்பட்டது. அவருக்கு முதலில் ஜாம்நகர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இரண்டு வாரங்கள் மருத்துவமனையிலிருந்த அவர் நான்கு மாதங்களுக்கு முன்பு அகமதாபாத் புற்றுநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் அக்டோபர் 2-ம் தேதி இறந்திருக்கிறார்.
இந்திய சினிமா செல்லுலாய்டில் இருந்து டிஜிட்டலுக்கு மாறியதன் பின்னணியில் செலோ ஷோ அமைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 14 அன்று இந்தியா முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில் படம் வெளியாகும் முன்பே இப்படத்தில் நடித்த சிறுவன் இறந்தது பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.







