செஸ் உலகக் கோப்பை போட்டி; இந்திய இளம் வீரர் பிரக்ஞானந்தா அரையிறுதிக்கு தகுதி…

செஸ் உலகக் கோப்பை போட்டியில் இந்திய இளம் வீரர் பிரக்ஞானந்தா அரையிறுதிக்கு தகுதி பெற்றார். அஜர்பைஜான் நாட்டின் பெக்கு நகரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை செஸ் காலிறுதி போட்டியில், சக இந்திய வீரர்…

செஸ் உலகக் கோப்பை போட்டியில் இந்திய இளம் வீரர் பிரக்ஞானந்தா அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

அஜர்பைஜான் நாட்டின் பெக்கு நகரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை செஸ் காலிறுதி போட்டியில், சக இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசியுடன், தமிழக வீரர் பிரக்ஞானந்தா மோதினார். பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் 7 டைபிரேக் ஆட்டங்களுக்குப் பிறகு பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் உலகக் கோப்பை வரலாற்றிலேயே அரையிறுதிக்கு முன்னேறிய 2-வது இந்தியர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றார். இவர் அரையிறுதி சுற்றில் அமெரிக்காவின் ஃபேபியானோ கருவானாவுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளார்.

மற்றொரு அரையிறுதிப் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரான மேக்னஸ் கார்ல்சன், அஜர்பைஜான் வீரரான அப்சவ் நிஜாத்தை எதிர்கொண்டு விளையாட உள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.