முக்கியச் செய்திகள் தமிழகம் விளையாட்டு

மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடக்கம்

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி அதிகாரப்பூர்வமாக மாமல்லபுரத்தில் தொடங்கியது.

செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் அதிகாரப்பூர்வமாக நடைபெற்று
வருகிறது. இந்த போட்டியை தொடங்கி வைப்பதற்காக மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர், மத்திய இணை அமைச்சர் எல் முருகன், தமிழகத்தின் விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன், சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குருடன் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் மற்றும் சர்வதேச சதுரங்க சங்கத்தின் தலைவர் ஆர்க்காடி
வோர்கோவிச் இணைந்து 44-வது செஸ் ஒலிம்பிக் போட்டி தொடங்கி வைத்தனர். இதில் 187
நாடுகள் 188 பொது அணிகள் மற்றும் பெண்கள் பிரிவில் 162 அணிகள் என மொத்தம் 350
அணிகள் கலந்து கொள்கின்றன.

செய்தியாளர்களிடம் அமைச்சர் அனுராத் தாக்குர் கூறுகையில், “பாகிஸ்தான் செஸ் போட்டியிலிருந்து ஓடாமல், வந்து விளையாட வேண்டும். எல்லா போட்டியிலிருந்தும் இப்படியே தான் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். செஸ் போட்டியில் அவர்களுக்கு வேறு வழி தெரியாமல் இப்படி செய்துவிட்டனர்” என்றார்.

தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் கூறுகையில், “தமிழக அரசின் உபசரிப்பினால் 44 வது செஸ் ஒலிம்பியாட் விளையாட வந்த உலக அளவிலான
வீரர்களுக்கு பெரும் விருந்தாக இருந்தது என தெரிவித்தனர். இதற்கு மிக முக்கிய
காரணம் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தான்” என்றார்.

இதில் இந்தியா சார்பாக ஆறு அணிகள் பங்கேற்று உள்ளன. மூன்று பொது பிரிவில் 15  வீரர்கள் உள்ளனர். 12 வீரர்கள் கலந்து உள்ளனர். மூன்று வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

Team 1

*இந்தியா 1 அணியினர் ஜிம்பாப்வே அணியோட மோதுகிறது.

*விதித் குஜராத்தி, அர்ஜுன் எரிகாசி, நாராயணன், சசிகிரன் ஆகியோர் ஜிம்பாப்வே
அணியின் வீரர்களுடன் விளையாட உள்ளனர்.

இந்திய 1 வது அணியில் ஹரி கிருஷ்ணனுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

இந்திய 2 வது அணி ஐக்கிய அரபு அமீரகத்துடன் விளையாட உள்ளனர்.

Team 2

குகேஷ்,சத்வாணி, நிகில் சரின்,அதிபன் ஆகியோர் ஐக்கிய அரபு அமீரகத்துடன் விளையாட உள்ளனர்.

இந்திய 2 வது அணி பிரகனந்தா ஓய்வு.

Team 3

இந்தியா 3 அணி:  சேதுராமன், அபிஜித் குப்தா, முரளி கார்த்திகேயன், அபிமன்யூ புரானிக்
சூர்யா சேகர் கங்குலி(ஓய்வு)

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

திருவண்ணாமலை ராஜகோபுரத்திற்கு 217 அடி மாலை போட்டு அழகு பார்த்தவர் மயில்சாமி!

Jayasheeba

நெருங்கும் மாண்டஸ் புயல்: சென்னையில் நீடிக்கும் கனமழை

Web Editor

தமிழத்திலேயே முதல் முறையாக ரவுடியை சுட்டு பிடித்த பெண் எஸ்.ஐ ! வீரமங்கைக்கு குவியும் பாராட்டுக்கள்

Web Editor