செஸ் ஒலிம்பியாட் 2ம் சுற்றுப் போட்டி – இன்று களம் இறங்குகிறார் பிரக்ஞானந்தா

44-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின் 2ம் சுற்றுப் போட்டிகள் இன்று நடைபெறவுள்ளது. தமிழக வீரர் பிரக்ஞானந்தா இன்று களம் இறங்குகிறார். செஸ் ஒலிம்பியாட் போட்டியில் நேற்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் ஓபன் பிரிவில்…

44-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின் 2ம் சுற்றுப் போட்டிகள் இன்று நடைபெறவுள்ளது. தமிழக வீரர் பிரக்ஞானந்தா இன்று களம் இறங்குகிறார்.

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் நேற்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் ஓபன் பிரிவில் 6 புள்ளிகளும், மகளிர் பிரிவில் 6 புள்ளிகளும் பெற்று அசத்தல் வெற்றி பெற்றது. மகளிர் பிரிவில் 3 அணிகளும் எதிர் அணிகளை ஒயிட் வாஷ் செய்தது. போட்டியில் பங்கு பெற்ற 24 பேரும் அடுத்தடுத்து வெற்றி பெற்றதையடுத்து இன்று இரண்டாம் சுற்றை சந்திக்கத் தயாராக உள்ளனர்.

மகளிர் அணி வெற்றி விவரம் – முதல் சுற்று

இந்திய மகளிர் அணி A – தஜிகிஸ்தான்

4-0 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியா வெற்றி

1. கொனெரு ஹம்பி – ஆண்டனோவா
கருப்பு நிறம், 41 வது நகர்த்தலில் வெற்றி

2. வைஷாலி – அப்ரோவா
வெள்ளை நிறம், 39 வது நகர்த்தலில் வெற்றி

3. தனியா சச்தேவ் – சைதோவா
கருப்பு நிறம், வெற்றி

4. குல்கர்னி பாக்தி – ஹொட்டாமி
வெள்ளை நிறம், 50 வது நகர்த்தலில் வெற்றி

இந்திய மகளிர் அணி B – வேல்ஸ்

4-0 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியா வெற்றி

1. வந்திகா அகர்வால் – ஒலிவியா
கருப்பு, 56 வது நகர்த்தலில் வெற்றி

2. சவுமியா சாமிநாதன் – கிம்பர்ளி
வெள்ளை, 37 வது நகர்த்தலில் வெற்றி

3. கோமேஸ் மேரி அண் – ஹியா ரே
கருப்பு, 29 வது நகர்த்தலில் வெற்றி

4. திவ்யா தேஷ்முக் – குஷி
வெள்ளை, 34 வது நகர்த்தலில் வெற்றி

இந்திய மகளிர் அணி C – ஹாங் காங்

4-0 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியா வெற்றி

1. கர்வதே ஈஷா – சிவப்பி கண்ணப்பன்
வெள்ளை , 49 வது நகர்த்தலில் வெற்றி

2. நந்திதா – ஜிங் சீன்
கருப்பு, 29 வது நகர்த்தலில் வெற்றி

3. சாஹிதி வர்ஷினி – ஜாய் சிங்
வெள்ளை, 37 வது நகர்த்தலில் வெற்றி

4. பிரத்யுஷா போடா – லேம் காய் யான்
கருப்பு, 32 வது நகர்த்தலில் வெற்றி

இவ்வாறாக முதல் நாள் போட்டியில் இந்தியா சிறப்பான தொடக்கத்தை தந்தது. இன்று நடைபெறவுள்ள இரண்டாம் சுற்று ஆட்டத்தில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா இன்று களம் இறங்குகிறார். மீண்டும் ஹாரிகா துரோனவல்லிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் சுற்று ஆட்டத்தில் இந்திய ஓபன் அணி – A மால்டோவா அணியுடன் மோதுகிறது. இதில், ஹரிகிருஷ்ணா (தமிழ்) – கருப்பு நிற காய்களிலும், சசிகிரண் (தமிழ்) – வெள்ளை நிறத்திலும், ஶ்ரீநாத் நாரயணன் (தமிழ்) – கருப்பு, அர்ஜூன் எரிகைசி – வெள்ளை நிற காய்களிலும் விளையாடுகின்றனர்.

இந்திய ஓபன் அணி – B எஸ்டோனியா அணியுடன் மோதுகிறது. இதில், குகேஷ் (தமிழ்) – கருப்பு நிற காய்களிலும், பிரக்ஞானந்தா (தமிழ்) – வெள்ளையிலும், அதிபன் (தமிழ்) – கருப்பிலும், ரவுனக் சத்வாணி – வெள்ளை நிற காய்களிலும் விளையாடுகின்றனர். இந்திய ஓபன் அணி – C மெக்சிகோ அணியுடன் மோதுகிறது. இதில், கங்குலி – கருப்பு நிற காய்களிலும், சேதுராமன் (தமிழ்) – வெள்ளையிலும், குப்தா – கருப்பிலும், கார்த்திகேயன் முரளி (தமிழ்) – வெள்ளை நிற காய்களிலும் விளையாடுகின்றனர். இந்திய மகளிர் அணி A – அர்ஜென்டினா உடன் மோதுகிறது கொனெரு ஹம்பி – கருப்பு நிற காய்களிலும், வைஷாலி (தமிழ்) – வெள்ளையிலும், தனியா சச்தேவ் – கருப்பிலும், குல்கர்னி பாக்தி – வெள்ளையிலும் விளையாடுகின்றனர்.

இந்திய மகளிர் அணி B – லாட்வியா அணியுடன் மோதுகிறது. வந்திகா அகர்வால் – கருப்பு நிற காய்களிலும், பத்மினி ராவுட் – வெள்ளையிலும், சவுமியா சாமிநாதன் – கருப்பிலும், கோமேஸ் மேரி அண் – வெள்ளையிலும் விளையாடுகின்றனர். இந்திய மகளிர் அணி C – சிங்கப்பூர் அணியுடன் மோதுகிறது. கர்வதே ஈஷா – கருப்பு நிற காய்களிலும், நந்திதா (தமிழ்) – வெள்ளையிலும், விஷ்வா வானவாலா – கருப்பிலும், பிரத்யுஷா போடா – வெள்ளை நிற காய்களிலும் விளையாடவுள்ளனர்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.