சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தொடர்புடைய வழக்குகளில் ஆஜராவதற்காக என்.ஆர்.இளங்கோ, வில்சன் எம்.பி. உள்ளிட்ட 6 மூத்த வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜராக மூத்த வழக்கறிஞர்கள் பி.எஸ்.ராமன், எம்.கே.கபீர், என்.ஆர்.இளங்கோ, பி.வில்சன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மதுரை கிளையில் மூத்த வழக்கறிஞர்கள் எம்.அஜ்மல் கான், ஐசக் மோகன்லால் ஆகியோரை நியமனம் செய்து பொதுத் துறை செயலாளர் ஜெகந்நாதன் உத்தரவிட்டுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பி.எஸ்.ராமன் 1960ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி பிறந்தார். இவர் மூத்த வழக்கறிஞரும், தமிழக அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞரும் ஆவார். இவர் முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞரும், திமுக பிரமுகருமான வி.பி.ராமனின் இளைய மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுகவைச் சேர்ந்த என்.ஆர்.இளங்கோ 1966ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி பிறந்தார். ராஜ்யசபா உறுப்பினராவார். 2020இல் மேலவைக்கு தமிழகத்தின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது தந்தை ஆர்.என்.ரங்கநாதன் ரஞ்சிதன்.
திமுகவைச் சேர்ந்த பி.வில்சன் தமிழகத்தின் முன்னாள் கூடுதல் அரசுத் தலைமை வழக்கறிஞர். 1966ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் தேதி பிறந்தார். ராஜ்யசபா உறுப்பினராவார்.
-ம.பவித்ரா