‘போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்டவர் மேஜரான பின்பு மீண்டும் நீதிமன்றத்தில் விசாரிக்கலாம்’

போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமி, மேஜராகி விட்டால் அவரை மீண்டும் வரவழைத்து குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கோவையில், சிறுமியை கடத்தியதாக கணேசன் என்பவர் போக்சோ சட்டத்தில்…

போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமி, மேஜராகி விட்டால் அவரை மீண்டும் வரவழைத்து குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோவையில், சிறுமியை கடத்தியதாக கணேசன் என்பவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவரையும், இரு மருத்துவர்களையும் அழைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று கணேசன் தாக்கல் செய்த மனுவை கோவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து கணேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சம்பவம் நடந்தபோது மைனராக இருந்த சிறுமி, தற்போது மேஜராகி விட்டதால் அவரை விசாரிக்க அனுமதிக்கலாம் எனவும், சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்காதது குற்றம் சாட்டப்பட்டவருக்கு அநீதி இழைத்ததற்கு சமம் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்றுக் கொண்டு சிறப்பு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த நீதிபதி, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தற்போது, 21 வயதாவதால், பாதிக்கப்பட்டவர் உள்பட மூன்று பேரையும் மீண்டும் அழைத்து விசாரிக்கலாம் என உத்தரவிட்டார். இதுசம்பந்தமாக, 6 ஆயிரம் ரூபாய் செலுத்தி, சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய கணேசனுக்கு அறிவுறுத்திய நீதிபதி, அந்த மனுவை பரிசீலித்து குறுக்கு விசாரணைக்கு அனுமதிக்க உத்தரவிட்டதுடன், 6 ஆயிரம் ரூபாயை தலா 2 ஆயிரம் வீதம் மூன்று சாட்சிகளுக்கும் வழங்க உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.