சென்னை காசிமேடு மீன்பிடி சந்தையில் கூட்டம் அலைமோதிய நிலையில், பொதுமக்கள் மீன்களை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், மீன்கள் வாங்க அதிகளவில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் குவிந்தனர். கடந்த வாரத்தை விட மீன்களின் வரத்து அதிகமாக இருந்த நிலையில், விலையும் சற்று அதிகரித்து காணப்பட்டது.
வஞ்சிரம் மீன் ஒரு கிலோ 1,200 ரூபாய்க்கும், கொடுவா 800 ரூபாய்க்கும், சங்கரா மீன் 600 ரூபாய்க்கும் விற்பனையானது. இறால் கிலோ 400 ரூபாய்க்கும், நண்டு கிலோ 400 ரூபாய்க்கு விற்றது. மீன்களின் விலை அதிகரித்த போதிலும், வியாபாரிகளும், பொதுமக்களும் மீன்களை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.







