முக்கியச் செய்திகள் தமிழகம்

சென்னை மாநகராட்சி பள்ளி சாதனை

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 2021-2022 ஆண்டு மாணவர் சேர்க்கை 1 லட்சத்தை கடந்தது.

சென்னையில், மொத்தம் 281 பள்ளிகள் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பலர் வாழ்வாதரத்தை இழந்ததால் தனியார் பள்ளிகளில் படித்துக்கொண்டிருந்த தங்களது பிள்ளைகளை அரசுப்பள்ளியில் சேர்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இதனால், தனியார் பள்ளிகளிலிருந்து வெளியேறி, சென்னை மாநகராட்சி பள்ளிகளில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் 2021-22 கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கை கடந்த மாதம் 14ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மாணவர் சேர்க்கை தொடங்கி தற்போது வரை 1,01,757 மாணவர்கள் மாநகராட்சி பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.

இந்நிலையில், இன்னும் ஒரு மாதங்களுக்கு மேல் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என மாநகராட்சி கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.  முன்னதாக கடந்த 2020-21 கல்வியாண்டில் மாநகராட்சி பள்ளிகளில் 27,311 மாணவர்கள் மட்டுமே புதிதாக சேர்ந்தனர். இதில், தனியார், அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் இருந்து வெளியேறிய சுமார் 19,038 மாணவர்கள் மாநகராட்சி பள்ளிகளில் சேர்ந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

மலேசியாவில் ரயில்கள் நேருக்கு நேர் மோதல்: 200 பேர் காயம்!

Halley karthi

ஜூலை 5 வரை ஊரடங்கு நீட்டிப்பு: 2 ஆம் வகை மாவட்டங்களில் என்னென்ன அனுமதி?

Ezhilarasan

சிறப்பு கேமரா மூலம் புகைப்படங்களை எடுத்து அசத்தும் மாற்றுத்திறனாளி இளைஞர்!

Halley karthi