ஸ்ரீ முஷ்ணம் பூவராக பெருமாள் கோயிலில் சித்திரை தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.
புகழ்பெற்ற பெருமாள் தலங்களில் ஒன்றான ஸ்ரீமுஷ்ணம் பூவராக பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் மாதம்14-ம் தேதி கொடயேற்றத்துடன் தொடங்கியது. ஏழாம் நாளான நேற்று சித்திரை தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. அதிகாலை பூவராக சுவாமி, அம்புஜவல்லி தாயாக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
மேலும் காலை 6 மணிக்கு உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவிகளுடன் பூவராக சுவாமி தேரில் எழுந்தருளி காட்சியளித்தார். பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் முக்கிய வீதிகள் வழியாக தேரை வடம் பிடித்து இழுத்து வலம் வந்தனர். இதனையடுத்து 10-வது நாள் தெப்ப உற்சவம் நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு தரிசனம் செய்தனர்.
—-அனகா காளமேகன்







