சென்னை கடற்கரை – வேளச்சேரி வழித்தடத்தில் செல்லும் ரயில் சேவை மாற்றம்…

விரிவாக்க பணிக்காக, சென்னை கடற்கரை – வேளச்சேரி வழித்தடத்தில் செல்லும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை – எழும்பூர் இடையேயான வழித்தட விரிவாக்கம் பணி 279 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெறவுள்ளது.…

விரிவாக்க பணிக்காக, சென்னை கடற்கரை – வேளச்சேரி வழித்தடத்தில் செல்லும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை கடற்கரை – எழும்பூர் இடையேயான வழித்தட விரிவாக்கம் பணி 279 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெறவுள்ளது. 7 மாத காலம் இந்த பணிகள் நடைபெறவுள்ள நிலையில், கடற்கரை – வேளச்சேரி வழித்தடத்தில் செல்லும் ரயில்கள் அனைத்தும் சிந்தாதிரிப்பேட்டை நிலையத்தில் இருந்து வேளச்சேரிக்கு இயக்கப்படுகிறது.

கடற்கரையில் இருந்து சிந்தாதிரிபேட்டை வரை ரயில்கள் இயக்கப்படவில்லை. ரயில் சேவை நிறுத்தம் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பயண நேரம் அதிகரிக்கும் என தெரிவித்த அவர்கள், பேருந்தில் செல்லும் பட்சத்தில் செலவு அதிகமாகும் எனவும் கூறினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.