சந்திரயான் 3 வெற்றி சாதிப்பதற்கான நம்பிக்கையை நிறைய ஏற்படுத்தியுள்ளது! அடுத்த இலக்கு சூரியனை ஆராய்ச்சி செய்வது தான்! – இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேச்சு

சந்திரயான் 3 வெற்றி சாதிப்பதற்கான நம்பிக்கையை நிறைய ஏற்படுத்தியுள்ளது. அடுத்த இலக்கு சூரியனை ஆராய்ச்சி செய்வது தான் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள, சந்திரயான்…

சந்திரயான் 3 வெற்றி சாதிப்பதற்கான நம்பிக்கையை நிறைய ஏற்படுத்தியுள்ளது. அடுத்த இலக்கு சூரியனை ஆராய்ச்சி செய்வது தான் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள, சந்திரயான் – 3 விண்கலத்தின், ‘லேண்டர்’ சாதனம், இன்று (ஆக.,23) மாலை 6:04 மணியளவில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு குறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியது:

சந்திரயான் -3 திட்டத்தில் இணைந்து பணியாற்றியவர்களுக்கு எனது பாராட்டை தெரிவித்துக்கொள்கிறேன். சந்திரயான் 3 திட்டத்திற்காக உழைத்த திட்ட இயக்குநர் வீர முத்துவேல் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன் சந்திரயான் 1ல் தொடங்கிய பயணம் சந்திரயான் 2-ஐ கடந்து இப்போது இந்த இடத்தில் நிற்கிறோம்.

இந்த நிகழ்வு வருங்காலத்தில் இதைவிட நிறைய சாதிக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த இலக்கு சூரியனை ஆராய்ச்சி செய்வது தான் . மேலும் எதிர்காலத்தில் செவ்வாய் வெள்ளி கிரங்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளவும் திட்டம் உள்ளது. இவ்வாறு சோம்நாத் கூறினார்

சந்திரயான் – 3 வெற்றிகரமாக தரையிறங்கியதை அடுத்து, இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு குறித்து ஜோஹன்ஸ்பர்க்கிலிருந்து தொலைபேசி வாயிலாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இவரை தொடர்ந்து பேசிய சந்திரயான் 3 திட்ட இயக்குனரான விழுப்புரத்தை சேர்ந்த  வீரமுத்துவேல் சாஃப்ட் லேண்டிங் முறையில் நிலவில் தரையிறங்குவதில் உலகின் நான்காவது நாடு மற்றும் தென் துருவத்தில் தரையிறங்கியுள்ள முதல் நாடு என்கிற முறையில் மிகுந்த பெருமையாக உணர்வதாக தெரிவித்தார். பின்னர் இந்த திட்டத்திற்காக உழைத்த அனைவருக்கும் சந்திரயான் 3 திட்ட இயக்குனர் என்கிற முறையில் நன்றி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.