அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம் தகவல்…

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த…

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, மதுரை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. எனவே, தொடர்ச்சியாக சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அலர்ட் கொடுத்ததும் வருகிறது.

அந்த வகையில், தற்போது தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு கனமழை தொடரும் எனவும், அடுத்த 3 மணி நேரத்திற்கு அதாவது, 4 மணி வரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவலை கொடுத்துள்ளது.

அதன்படி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், புதுக்கோட்டை, தேனி மற்றும் நீலகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.