தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களுக்கு மாலை 6 மணிவரை மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் மாலை 6 மணி வரை, இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தது மற்றும் வளிமண்டல காற்றின்…

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் மாலை 6 மணி வரை, இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தது மற்றும் வளிமண்டல காற்றின் சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. குறிப்பாக மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிக கனமழை பெய்து குடியிருப்புகள் முழுவதும் வெள்ளநீர் சூழந்தது. அங்கு மீட்பு பணிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் தென்னிந்திய கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று மாலை 6 மணிவரை தமிழகத்தில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் சிவகங்கை, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், பெரம்பலூர், அரியலூர், மற்றும் திருச்சி ஆகிய 11 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.