தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.  இதன்காரணமாக தமிழ்நாட்டில்  இன்று முதல் 25ம் தேதி வரை…

தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.  இதன்காரணமாக தமிழ்நாட்டில்  இன்று முதல் 25ம் தேதி வரை அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்துளளது.  இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.  தமிழ்நாட்டில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது.

இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது.  அவ்வப்போது லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.  சில சமயங்களில் சாரல் மழை பெய்து வருகிறது.  இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி நீலகிரி,  திண்டுக்கல்,  கோவை,  திருப்பூர்,  தேனி,  தென்காசி,  நெல்லை,  கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் கோவை,  நீலகிரி ஆகிய மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.