சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், உள்ளிட்ட 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் பரவலாக நேற்று முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
சென்னையில் நேற்று காலை முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மாலை மற்றும் இரவில் மழை பெய்தது. கேகே நகர், போரூர், மாங்காடு, ஈக்காட்டுத்தாங்கல், கோயம்பேடு, அசோக்நகர் , வேளச்சேரி, நங்கநல்லூர், ஆலந்தூர், வடபழனி, உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் மழை பெய்தது.
இந்நிலையில், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், நீலகிரி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 15 மாவட்டங்களிலும் புதுச்சேரியில் ஒரு சில பகுதிகளிலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.







