இன்ஸ்டாவில் ஜி.வி.பிரகாஷின் பெயரை நீக்கிய சைந்தவி!

பிரபல பாடகி சைந்தவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜி.வி. பிரகாஷின் பெயரை நீக்கியுள்ளார்.  கடந்த 2006-ம் ஆண்டு தமிழில் வெளியான ‘வெயில்’ என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி பிரகாஷ் குமார். தற்போது…

பிரபல பாடகி சைந்தவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜி.வி. பிரகாஷின் பெயரை நீக்கியுள்ளார். 

கடந்த 2006-ம் ஆண்டு தமிழில் வெளியான ‘வெயில்’ என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி பிரகாஷ் குமார். தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

கடந்த 2013-ஆம் ஆண்டு பாடகி சைந்தவியை, ஜி.வி.பிரகாஷ் குமார் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 வயதில் அன்வி என்கின்ற ஒரு பெண் குழந்தை உள்ளது. இதனிடையே இருவரும் கடந்த மேமாதம் தங்கள் விவாகரத்து செய்தியை அறிவித்து ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தனர். ஆனால் சைந்தவி தங்கள் இருவருக்குமான நட்பு தொடரும் எனவும், தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் சைந்தவி பிரகாஷ் என்கிற பெயரில் கணக்கு வைத்திருந்த சைந்தவி தற்போது பிரகாஷ் என்பதை நீக்கியுள்ளார். இருப்பினும் அவரை தொடர்ந்து ஃபாலோ செய்து வருகிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.