மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் மத்திய குழு இன்று ஆய்வு!…

தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை மத்திய குழு இன்று ஆய்வு நடத்துகிறது. தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பதிப்புகளை தேசிய பேரிடர் மேலாண்மை குழு ஆலோசகர் கே.பி.சிங் தலைமையில் 5…

தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை மத்திய குழு இன்று ஆய்வு நடத்துகிறது.

தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பதிப்புகளை தேசிய பேரிடர் மேலாண்மை குழு ஆலோசகர் கே.பி.சிங் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

முன்னதாக விமானம் மூலம் மதுரை வந்தடைந்த இவர்கள், இன்று கார் மூலம் புறப்பட்டு தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் வெள்ள சேதங்களை பார்வையிட உள்ளனர்.

மேலும் மத்திய குழுவுடன், மாவட்ட நிர்வாகம் உடனிருக்க வேண்டிய நிலைமையை கருத்தில் கொண்டு நாளை தூத்துக்குடியில் முதலமைச்சர் ஆய்வு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.