தமிழகத்தில் புரெவி மற்றும் நிவர் புயல்கள் ஏற்படுத்திய பாதிப்புகளுக்காக மத்திய அரசு 286 கோடியே 91 லட்ச ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் புயல்கள் மற்றும் பெருவெள்ளம் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு, ஆந்திரா, புதுச்சேரி, பீகார், மத்தியப்பிரதேச மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து கூடுதல் நிதியாக 3 ஆயிரத்து 113 கோடியே 5 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
புரெவி மற்றும் நிவர் புயல்கள் ஏற்படுத்திய பாதிப்புகளுக்காக தமிழகத்துக்கு 286 கோடியே 91 லட்ச ரூபாய் கூடுதல் நிதியும், புதுச்சேரி மாநிலத்திற்கு 9 கோடியே 91 லட்ச ரூபாய் கூடுதல் நிதியும் ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் பீகார் மாநிலத்திற்கு ஆயிரத்து 255 கோடியே 27 லட்ச ரூபாய் நிதியும், மத்திய பிரதேசத்திற்கு ஆயிரத்து 280 கோடியே 18 லட்ச ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
2020-21 நிதியாண்டில் மாநில பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து 28 மாநிலங்களுக்கு 19 ஆயிரத்து 36 கோடியே 43 லட்ச ரூபாய் நிதியும், தேசிய பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து 4 ஆயிரத்து 409 கோடியே 71 லட்ச ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.