பெகாசஸ் நிறுவனத்துடன் எந்தவித பணப்பரிமாற்றமும் செய்யவில்லை – மத்திய அரசு

பெகாசஸ் தயாரிப்பு நிறுவனத்துடன் எந்தவித பணப்பரிமாற்றமும் செய்யவில்லை என மாநிலங்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சம் விளக்கமளித்துள்ளது. பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்த்ததாக மத்திய அரசு மீது குற்றம்சாட்டி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்கட்சிகள் தொடர்…

பெகாசஸ் தயாரிப்பு நிறுவனத்துடன் எந்தவித பணப்பரிமாற்றமும் செய்யவில்லை என மாநிலங்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சம் விளக்கமளித்துள்ளது.

பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்த்ததாக மத்திய அரசு மீது குற்றம்சாட்டி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, மாநிலங்களவையில் கேரள மாநில உறுப்பினர் சிவதாசன், பெகாசஸ் விவகாரம் குறித்து எழுப்பிய கேள்விக்கு, மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பட் பதிலளித்துள்ளார். பெகாசஸ் உளவு மென்பொருள் சேவையை வழங்கும், NSO நிறுவனத்துடன் எந்தவிதமான வர்த்தகமோ, பணப்பரிமாற்றமோ நடைபெறவில்லை என பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பட் விளக்கம் அளித்துள்ளார்.

மழைக்கால கூட்டத் தொடர் இன்னும் 4 நாட்கள் மட்டுமே நடைபெற உள்ள மிக முக்கியமான சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட இருப்பதால், நாளையும், நாளை மறுநாளும் பாஜக மாநிலங்களவை உறுப்பினர்கள் கண்டிப்பாக கூட்டத்தொடரில் பங்கேற்கவேண்டும் என பாஜக தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது. நாளை காலை பாஜகவின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் நடைபெற உள்ளதும் குறிப்பிடத்தக்கது. பெகாசஸ் விவகாரத்தில் அமைதி காக்கும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திமுக மாநிலங்களை குழுத்தலைவர் திருச்சி சிவா தலைமையில் திமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து இன்றைய அவை கூட்டத்தில் பங்கேற்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.