சிமெண்ட் விலையை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய அதிமுக எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன், கட்டுமானப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாட்டில் சிமெண்ட் விலை உயர்வை உடனடியாக கட்டுபடுத்தும் வகையில் கடந்த 14-ம் தேதி சிமெண்ட் உற்பத்தியாளர்களை அழைத்து பேச்சு நடத்தியதாக தெரிவித்தார். அதன்படி சிமெண்ட் விலை குறைக்கப்பட்டுள்ளது. தற்போது சிமெண்ட் விலை ரூ.460 ஆக உள்ளது அதை மேலும் குறைக்க அறிவுறுத்தியுள்ளோம்” என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்