ஏலே பண்டிகைய கொண்டாடுங்களே… தீபாவளி மறுநாளும் விடுமுறை அளித்து அரசு உத்தரவு!

தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 1ஆம் தேதியும் தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்துள்ளது. பண்டிகைகள் என்றாலே அனைவரும் எண்ணுவது விடுமுறை தினங்களையே. அந்த வகையில், வரும் தீபாவளி பண்டிகையன்று தொடர் விடுமுறைகள் கிடைக்குமா என்று பலரும்…

தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 1ஆம் தேதியும் தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

பண்டிகைகள் என்றாலே அனைவரும் எண்ணுவது விடுமுறை தினங்களையே. அந்த வகையில், வரும் தீபாவளி பண்டிகையன்று தொடர் விடுமுறைகள் கிடைக்குமா என்று பலரும் கேட்டுக் கொண்டிருந்த நிலையில், தற்போது இது குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அக்.31 தீபாவளி பொதுவிடுமுறையை தொடர்ந்து, மறுநாளான நவ.1ஆம் தேதியும் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

இவ்வாண்டு தீபாவளியை 31.10.2024 அன்று கொண்டாடும் பொருட்டு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 01.11.2024 அன்று ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்தும் அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும், அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 09.11.2024 அன்று பணி நாளாக அறிவித்தும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.