சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் எம்.பி. கார்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை  மேற்கொண்டு வருகின்றனர். காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்தின் சென்னை நுங்கம்பாக்கத்தில்…

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் எம்.பி. கார்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை  மேற்கொண்டு வருகின்றனர்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்தின் சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள வீடு உள்ளிட்ட இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது.

ப.சிதம்பரம் டெல்லியிலலும், எம்.பி. கார்த்திக் சிதம்பரம் லண்டனிலும் உள்ள நிலையில் செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணி முதல் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது. தற்போது சோதனை நடைபெறும் நுங்கம்பாக்கம் வீட்டில் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் இருக்கிறார். காலையில் 14 சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், தற்போது 7 பேர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் 7 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

https://twitter.com/KartiPC/status/1526408125670121472

இந்நிலையில், லண்டனில் உள்ள கார்த்தி சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், இதுவரை எத்தனை முறை சோதனை நடந்தது என கணக்கு இல்லை; எத்தனை முறைதான் சோதனை நடத்துவீர்கள்? என கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.