தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு!

தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 40 வது கூட்டம் இன்று(மே.22) டெல்லியில் நடைபெற்றது. காவிரி நீர் மேலாண்மை ஆணைய அலுவலகத்தில் ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹால்தர் தலைமையில் இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பாக  நீர்வளத் துறை செயலாளர் ஜெ.ஜெயகாந்தன், காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் ஆர்.சுப்பிரமணியம், உறுப்பினர் எல்.பட்டாபி ராமன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். மேலும்  கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில அரசு பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் - கர்நாடகாவுக்கு காவிரி நீர்  மேலாண்மை ஆணையம் உத்தரவு! - News7 Tamil

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில், தென்மேற்கு பருவமழை, 2025, மே மாதம் 27ம் நாள் துவங்கும் எனவும், இப்பருவமழை இயல்பைவிட சற்று அதிகமாக இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதாலும், வரும் ஆண்டில் தமிழகத்திற்கு ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் வழங்கப்பட வேண்டிய நீர் அளவான முறையே 9.19 டி.எம்.சி மற்றும் 31.24 டி.எம்.சி. நீரினை உச்சநீதி மன்ற ஆணையின்படி கர்நாடகம் பில்லிகுண்டுலுவில் றுதி செய்யுமாறு தமிழகம் சார்பில் ஆணைய கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இந்த நிலையில் கோரிக்கையை ஏற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஜூன் ம்ற்றும் மாதங்கள் திறந்து விட வேண்டிய தண்ணீரை திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.