முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்: இன்று நடக்கிறது

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் இன்று நடக்கிறது.

இதில், தமிழ்நாட்டின் சார்பில் பொதுப்பணித் துறை செயலர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்க இருக்கின்றனர். கொரோனா காரணமாக, ஓராண்டாக ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலம் பங்கேற்ற அதிகாரிகள், இன்றைய கூட்டத்தில் நேரடியாக பங்கேற்கின்றனர்.

இதற்கிடையே, காவிரி உள்ளிட்ட பிரச்னைகளில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு, தமிழக அரசு சார்பில் நியமிக்கப்பட்டுள்ள ஆறு பேர் அடங்கிய வழக்கறிஞர்கள் குழுவினர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். காவிரி ஆணைய கூட்டத்தில் இன்று எடுக்கப்படும் முடிவைப் பொறுத்து தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தை அணுகும் என்று கூறப்படுகிறது.

தமிழ்நாட்டிற்கு ஆண்டு தோறும் 177.25 டி.எம்.சி. காவிரி நீரை, கர்நாடக அரசு வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய நீரின் அளவை, காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயித்துள்ளது. நீர் வழங்கும் தவணை காலம் ஜூன் மாதம் துவங்கியது. ஆனால், கர்நாடக அரசு முறைப்படி நீரை வழங்கவில்லை. 28.7 டி.எம்.சி. நீர் இன்னும் நிலுவையில் உள்ளது. இதுகுறித்து, முறையிடப்பட்டபோது, மழை வந்தால் தருவதாக கர்நாடக அதிகாரிகள் கூறியிருந்தனர். இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் இன்று நடக்கிறது.

Advertisement:
SHARE

Related posts

அசராத முயற்சியால் அழகி பட்டம் வென்ற தேவதை!

Vandhana

இந்தியா மிகப்பெரிய சோதனை கட்டத்தில் உள்ளது – திருச்சி சிவா

Halley karthi

காலிப்பணியிடங்களை அறிவித்தது இந்திய ரயில்வேத்துறை!

Jeba Arul Robinson