பட்டியலினத்தவர்களுக்கான இடஒதுக்கீடு வழக்கு; நவ.1ல் விசாரணை- உச்சநீதிமன்றம்

பட்டியலினத்தவர்கள் மற்றும் பழங்குடியினவர்களுக்கு அரசியல் ரீதியிலான இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை நவம்பர் 1ம் தேதி நடத்தப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில்…

பட்டியலினத்தவர்கள் மற்றும் பழங்குடியினவர்களுக்கு அரசியல் ரீதியிலான இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை நவம்பர் 1ம் தேதி நடத்தப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்ட வரம்பு இருக்கின்றது. தொடக்கத்தில் 10 ஆண்டுகளுக்கு மட்டும் என கொண்டுவரப்பட்ட இந்த இட ஒதுக்கீடு முறை பிறகு ஒவ்வொரு 10 ஆண்டுக்கு ஒரு முறை நீட்டிக்கப்பட்டு வருகிறது

அதன்படி, தற்போது அமலில் இருக்கும் இட ஒதுக்கீடு முறை 2030 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த இட ஒதுக்கீட்டை அமல்படுத்த செயல்படுத்தப்படும் அரசியல் சாசனப் பிரிவு 330- 334 ஆகியவற்றை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் பல ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகின்றன.

இந்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சந்திர சூட்,எம் ஆர் ஷா, கிருஷ்ணா முராரி, ஹீமா கோலி, பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த மனுக்கள் அனைத்தையும் நவம்பர் 1ம் தேதி விசாரணைக்கு பட்டியல் இடப்படும் என அறிவித்து, வழக்கை ஒத்திவைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.