திண்டிவனம், புதுச்சேரி சாலையில் தனியார் பேருந்து, காரில் மோதி விபத்துக்குள்ளானதில், கணவன் மனைவி படுகாயம் அடைந்தனர்.
திண்டிவனம், பகுதியில் இருந்து புதுச்சேரி நோக்கி விஜயகுமார் என்ற தனியார்
பேருந்து பட்டானுர் அருகே வந்து கொண்டிருந்தது. இதேபோன்று புதுச்சேரியில்
இருந்து ஜவஹர் நகரை சார்ந்த சத்தியமூர்த்தி தனது மனைவியுடன் கூட்ரோடு
பகுதிக்கு காரில் சென்றுள்ளார்.
அப்போது பட்டானுர் பகுதியில் சாலையின் குறுக்கே சென்ற மாட்டின் மீது மோதாமல் இருக்க பேருந்து ஓட்டுநர் பேருந்தை திருப்பியபோது சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரின் மீது ஏறி எதிரே வந்த கார் மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த ஜவஹர் நகரைச் சார்ந்த சத்தியமூர்த்தி மற்றும் அவரது மனைவி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
உடனடியாக அருகில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு புதுச்சேரி ஜிப்மர்
மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆரோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
ரூபி.காமராஜ்







