‘கேப்டன் மில்லர்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் ஒடிடி வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.  கோலிவுட் திரையில் அறிமுகமாகி ஹாலிவுட் சினிமாவில் நடிக்கும் அளவிற்கு உருவெடுத்திருக்கிறார் நடிகர் தனுஷ்.  இயக்குனர்…

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் ஒடிடி வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

கோலிவுட் திரையில் அறிமுகமாகி ஹாலிவுட் சினிமாவில் நடிக்கும் அளவிற்கு உருவெடுத்திருக்கிறார் நடிகர் தனுஷ்.  இயக்குனர் அருண் மாதேஸ்வரன்,  ராக்கி மற்றும் சாணி காகிதம் ஆகிய படங்களுக்கு அடுத்து தனது மூன்றாவது படமான கேப்டன் மில்லர் படத்தை தனுஷை வைத்து இயக்கியுள்ளார்.

இப்படத்தில் தனுஷுடன் இணைந்து பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.  இத்திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்தள்ளது.  இப்படம் ரூ.50 கோடி பட்ஜெட்டில் உருவானது.  மேலும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12-ம் தேதி வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையும் படியுங்கள்:  ரூ.700க்கு Thar car வாங்க ஆசைப்பட்ட சிறுவன்… ஆனந்த் மஹேந்திரா கொடுத்த இன்ப அதிர்ச்சி!

ஆக்ஷன் பாணியில் உருவாகியிருக்கும் இத்திரைப்படம் உலகளவில் மொத்தமாக ரூ.105 கோடி வரை வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பிப். 9-ம் தேதி அமேசான் பிரைமில்  வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.