”தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை வழங்க இயலாது!” காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் கர்நாடக அரசு திட்டவட்டம்!

தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை வழங்க இயலாது என காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் கர்நாடக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. காவிரி நதிநீர் பகிர்வு தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையத்தின் 23-வது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.…

தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை வழங்க இயலாது என காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் கர்நாடக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

காவிரி நதிநீர் பகிர்வு தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையத்தின் 23-வது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். காவிரியில் இருந்து வினாடிக்கு 24 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் வலியுறுத்தினர்.

ஆனால், காவிரி மேலாண்மை ஆணையம், தமிழகத்திற்கு விநாடிக்கு 5000 கன அடி நீரை அடுத்த 15 நாட்களுக்கு கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என உத்தரவிட்டது. இந்த உத்தரவையும் ஏற்க மறுத்த கர்நாடக அரசு, தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என  திட்டவட்டமாக கூறிவிட்டது.

அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லாததால் இப்போதைக்கு தண்ணீர் திறந்து விட முடியாது என கர்நாடக அரசு விளக்கம் அளித்துள்ளது. கர்நாடகத்தில் உள்ள அணைகளில் தற்போது 47 சதவீத அளவிற்கு மட்டுமே தண்ணீர் இருப்பதாகவும், விநாடிக்கு 3000 கன அடிக்கு மேல் நீர் திறக்க முடியாது எனவும் கர்நாடக அரசு தெரிவி்த்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.