முக்கியச் செய்திகள் இந்தியா

ராஜீவ் காந்தி அறக்கட்டளை உரிமம் ரத்து – மத்திய அரசு உத்தரவு

வெளிநாட்டிலிருந்து நிதி பெறுவதில் விதிமுறைகளை மீறியதாக ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் உரிமத்தை மத்திய உள்துறை அமைச்சகம் ரத்து செய்துள்ளது.

ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு வெளிநாட்டில் இருந்து நிதிபெறுவதில் விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் ராஜீவ் காந்தி அறக்கட்டளை, ராஜீவ் காந்தி தொண்டு நிறுவனம் மற்றும் இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை ஆகிய 3 அறக்கட்டளைகளில் சட்ட விதிமுறை மீறல் ஏதும் நடந்துள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு ஒரு குழுவை அமைத்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ராஜீவ் காந்தி அறக்கட்டளை, 1991ம் ஆண்டு ஜூன் 21ல் அமைக்கப்பட்டது. சோனியா காந்தி தலைமையில் இயங்கும் இந்த அறக்கட்டளையில், மன்மோகன்சிங், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வதேரா, ப.சிதம்பரம், மாண்டேக் சிங் அலுவாலியா, சுமன் துபே அசோக் கங்குலி உள்ளிட்டோர் அறங்காவல்களாக உள்ளனர்.

இந்நிலையில் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், வெளிநாட்டிலிருந்து நிதி பெறுவதில் விதிமுறைகளை மீறியதாக அறக்கட்டளையின் உரிமம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கோலாலம்பூர் அருகே நிலநடுக்கம் – ரிக்டரில் 6.1ஆகப் பதிவு

Web Editor

புதுச்சேரியில் மீனவர்கள் சாலை மறியல்!

Gayathri Venkatesan

சேலம் அதிமுக ஒன்றிய செயலாளர் போர்க்கொடி

EZHILARASAN D