சட்டமன்ற தேர்தலில் வரவேற்பு அளித்து நம்பிக்கை கொடுத்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிக்காமல் ஏமாற்றியதைப்போல், இம்முறை ஏமாற்ற மாட்டீர்கள் என நம்பலாமா? என்று தேர்தல் பரப்புரையின் போது, உதயநிதி ஸ்டாலின் கோவை மக்களிடம் கேள்வி எழுப்பினார்.
நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரிரு நாட்களே உள்ளதால் பிரதான கட்சிகள் வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், இன்று இறுதிகட்ட பிரச்சாரம் என்பதால், தேர்தல்களம் சூடுபிடித்திருக்கிறது. இந்நிலையில், கோவை
திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கோவை சுந்தராபுரத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அவர் பேசுகையில், கண்டிப்பாக உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.
ஆனால், கோவை மாவட்ட மக்களை நம்ப மாட்டேன். கடந்த சட்டமன்ற தேர்தலில் இது போன்று தான், எனக்கு வரவேற்பு அளித்து நம்பிக்கை கொடுத்தீர்கள் .ஆனால் வாக்களிக்க தவறிவிட்டீர்கள். ஆனால் இந்த முறை வாக்களிக்க மறந்து விடாதீர்கள். கடந்த கால ஆட்சியில் தடுப்பூசி போட முடியாமல் பல பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள்.
ஆனால் இந்த முறை தடுப்பூசி செலுத்தி கொரோனாவைக் பெருமளவு கட்டுபடுத்தியுள்ளோம். தேர்தலில் சொன்ன வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளார் முதல்வர். அதேபோல் குடும்ப தலைவிகளுக்கு ரூ. 1000 மும் விரைவில் கொடுக்கப்படும் . முதல்வர் சொன்னதை செய்வார். மக்களால் தேர்தெடுக்கபட்ட ஆட்சி இது என்பதை எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரிவித்து கொள்கிறேன்
வேலுமணி மீது நடவடிக்கை எடுப்பது நிச்சயம். தற்போது அவரது ரூ. 110 கோடி சொத்துகள் முடக்கபட்டுள்ளது. அடுத்தது எடப்பாடி பழனிச்சாமி மீதும் நடவடிக்கை எடுப்போம். அடுத்த 6 அம்மாவாசைகளில் ஆட்சி மாற்றம் வரப்போவதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவிக்கிறார். யார் அம்மாவாசை என்பது உங்களுக்கு தெரியும்.. இந்த முறை கோவை மக்களை நம்பலாமா என பேசினார்.









