முக்கியச் செய்திகள் தமிழகம்

பிரதமரை பார்த்து கேட்க முடியுமா? – இபிஎஸுக்கு ஆர்.எஸ்.பாரதி கேள்வி

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், திமுக-வை சாடி பேசிய எடப்பாடி பழனிசாமிக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றபோது, விழாவில் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுகவை குற்றம் சாட்டி பேசினார். மேலும் தன்னை பழைய பழனிசாமி என நினைக்க வேண்டாம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சாடி உரையாற்றினார். இதற்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தானே கூட்டி, தன்னையே தலைமையாகத் தேர்ந்தெடுத்துக் கொண்ட பொதுக்குழுவில் பேசிய ‘தற்காலிக அ.தி.மு.க. பொதுச்செயலாளர்’ எடப்பாடி பழனிசாமி, தேவையில்லாமல் தி.மு.க.வை சுரண்டிப் பார்த்திருக்கிறார் என தெரிவித்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ராயப்பேட்டையில், இரு தரப்பினருக்கு இடையே மோதி கொண்ட நிலையில், அவர்கள் தி.மு.க. மீது பாய்வது என்பது, திசைத் திருப்புகிற வேலையன்றி, வேறு எதுவுமல்ல என தெரிவித்துள்ளார். அந்தக் கட்சித் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து, தி.மு.க.வை எதிர்த்துதான் அரசியல் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறது.

திமுக என்பது திராவிடக் கொள்கைகளை நிலைநிறுத்துகிற இயக்கம். அந்தத் திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருப்பதால் அது அதிமுக என்று அப்போதே கருணாநிதி தெரிவித்திருக்கிறார் என ஆர்.எஸ்.பாராதி குறிப்பிட்டுள்ளார்.

இப்போதும் அதைத்தான் பழனிசாமி – பன்னீர்செல்வம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்றும், அதிமுகவைத் தொடங்கியபோது அதற்கு டெல்லியில் மறைமுக எஜமானர்கள் இருந்தார்கள். இப்போது பழனிசாமி – பன்னீர்செல்வத்திற்கு டெல்லிதான் நேரடி எஜமானர்கள் என விமர்சித்துளளார்.

பழனிசாமி எதற்காகத் திடீரென பழைய பழனிசாமி பற்றி அவரே நினைவூட்டிக் கொள்கிறார்? பழைய பழனிசாமி கொலை வழக்குகளை எதிர்கொண்டார்; புது பழனிசாமி கொடநாடு வழக்கை எதிர்கொள்கிறார். பழைய பழனிசாமி ஜெயலலிதா – சசிகலாவை நம்பி இருந்தனர். புது பழனிசாமி மோடி – அமித்ஷாவை நம்பி இருக்கின்றனர். இதில் நடக்காது ஸ்டாலின் என வசனம் பேசுகிறார்.

வழக்குகள் போட்டு தி.மு.க. பழி வாங்குகிறது என்று பொங்கிய பழனிசாமி, வருமான வரித் துறை – அமலாக்கத்துறை – சி.பி.ஐ என அவரது ஆட்சிக்காலத்திலேயே ஒன்றிய அரசின் துறைகள் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிராக எப்போதாவது குரல் உயர்த்தியது உண்டா? என கேள்வி எழுப்பியுள்ளார். இப்போதுகூட அவருடைய ஆட்சிக்காலத்து அமைச்சர்கள் முதல் ஒப்பந்தக்காரர்கள் வரை பலருக்கும் சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை ரெய்டு நடத்தியிருக்கிறதே? என தெரிவித்துள்ளார்.

பொதுக்குழுவில் தி.மு.க.வை நோக்கிப் பொங்கிய பழனிசாமி, ஒன்றிய பா.ஜ.க. அரசு பழிவாங்குகிறது என்று பொங்க வேண்டாம், முணுமுணுக்கக்கூட தைரியம் உள்ளதா என தெரிவித்துள்ளார். தி.மு.க. குடும்ப அரசியல் நடத்துகிறது என்று வாய்கூசாமல் சொல்லிக்கொண்டு, தனது ஆட்சிக்காலம் முழுவதும் குடும்ப டெண்டர் அரசியல் நடத்தியவர்தான் பழனிசாமி. இதோ அண்மையில்கூட கோவை சந்திரசேகர், அருப்புக்கோட்டை செய்யாதுரை ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட வருமானவரித்துறை சோதனைகளில் கணக்கில் வராத 500 கோடி ரூபாய் வருமானம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

அவர்கள் மூலமாக உங்கள் ஆட்சியில் எப்படி அரசுப் பணத்தைக் கொள்ளையடித்திருக்கிறீர்கள் என்று உங்கள் டெல்லி எஜமானர்களின் நிர்வாகத்தில் உள்ள வருவமான வரித்துறை சோதனை நடத்தி வெளிப்படுத்தியிருக்கிறது. எங்கே ஒரே ஒரு வார்த்தை, “பழைய பழனிச்சாமினு நினைச்சிக்கிட்டீங்களா, மோடி அவர்களே” என்று பேசிப் பாருங்களேன். உங்களின் பழைய கதை, புதிய கதை என எல்லாக் குப்பைகளும் கிளறப்படும் பின்னர் உங்களை பற்றி உங்கள் கட்சியினருக்கே தெரிந்துவிடும்.

நடவடிக்கை எடுத்தவர்களிடம் எதிர்த்து நிற்காமல், தி.மு.க.வையும், அதன் தலைவரும் எந்நாளும் மக்கள் நலன் காத்திட உழைத்திடும் முதலமைச்சருமான, இந்தியாவின் ‘நம்பர் ஒன்’ முதலமைச்சரை நோக்கி கேள்வி எழுப்ப எந்த அருகதையும் இல்லை. துணிவிருந்தால் – நேர்மையிருந்தால் கோவை சந்திரசேகர், அருப்புக்கோட்டை செய்யாதுரை ஆகியோரிடம் வருமானவரித்துறை கைப்பற்றிய 500 கோடி ரூபாய் வருமானம் பற்றியும் அவர்களுக்கும் உங்களுக்கும் என்ன உறவு என்று பழனிசாமி பதில் சொல்லட்டும் என ஆர்.எஸ்.பாரதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மீண்டும் “கீத கோவிந்தம்” குழுவுடன் இணைந்த விஜய் தேவரகொண்டா

Yuthi

உணவில் மலத்தை அள்ளி வீசியதாக கதறிய குடும்பத்தினர்; உடனடி நடவடிக்கைக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு…

Web Editor

அதிமுக பொதுக்குழு வழக்கு; உச்சநீதிமன்றம் செல்லும் ஓபிஎஸ்

EZHILARASAN D