கலைஞர் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற இதுவரை விண்ணப்பம் செய்யாத தகுதியுள்ள பயனாளிகள் இணைய சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது அக்கட்சி சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15, அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.
இத்திட்டத்திற்கான தகுதி வாய்ந்த பயனாளிகளை கண்டறிய விண்ணப்பங்கள் பெறப்பட்டன. சுமார் 1.70 கோடி விண்ணப்பங்கள் வரை பெறப்பட்ட நிலையில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத் தலைவிகள் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த திட்டத்தை அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இநநிலையில் ‘கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெற இதுவரை விண்ணப்பம் செய்யாத தகுதியுள்ள பயனாளிகள் இணைய சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று, நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாராகள் மேல் முறையீடு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மகளிா் உரிமைத் தொகைக்கு இதுவரை விண்ணப்பம் செய்யாதவா்களும் விண்ணப்பிக்கலாம். இதற்கென இணைய சேவை மையங்களில் வசதி செய்யப்பட உள்ளது. இந்த வசதியை வரும் 18-ஆம் தேதி முதல் பயன்படுத்திக் கொள்ளலாம் என அரசு துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
மேல்முறையீடு செய்யப்படும் விண்ணப்பங்களை இணையதளம் வழியாகவே கோட்டாட்சியர்கள் பரிசீலிப்பா் என தகவ்ல வெளியாகியுள்ளது.
கைபேசியில் குறுஞ்செய்தி வந்த நாளில் இருந்து 30 நாள்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் எனவும், மேல்முறையீட்டு பரிசீலனையை ஒரு மாதத்துக்குள் முடிக்க வேண்டுமெனவும் கூறப்படுகிறது.







