திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வெட்டி கொல்லப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தில் மது அருந்தியவர்களை தட்டிக்கேட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஏற்கனவே முக்கிய குற்றவாளியான வெங்கடேஷ், அவரது தந்தை ஐயப்பன், செல்லமுத்து, சோனை முத்தையா ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில், விசாரணையின் போது தப்பிக்க முயன்ற செல்லமுத்து கால் முறிவு ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதேபோல், வெங்கடேஷும் தப்பிக்க முயன்றதால் சுட்டுப் பிடிக்கப்பட்ட நிலையில், அவரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், 4 பேருக்கும் அடைக்கலம் கொடுத்ததாக வெங்கடேஷின் சகோதரர் செல்வம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். செல்வத்தை பிடிக்க சென்றபோது தப்பி முயன்றபோது, நிலைதடுமாறி கீழே விழுந்ததில் காலில் காயம் ஏற்பட்டதால் அவர் பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.







