முதன் முறையாக ‘தணிக்கை தினம்’ கொண்டாட்டம் – பிரதமர் மோடி பெருமிதம்

காலப்போக்கில் வலுவாகவும், முதிர்ச்சியடைந்ததாகவும், மிகவும் பொருத்தமானதாகவும் மாறும் நிறுவனங்கள் மிகக் குறைவு. ஆனால் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் பொறுப்பு அப்படியானது அல்ல என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். இன்று நாடு முழுவதும் ‘தணிக்கை…

காலப்போக்கில் வலுவாகவும், முதிர்ச்சியடைந்ததாகவும், மிகவும் பொருத்தமானதாகவும் மாறும் நிறுவனங்கள் மிகக் குறைவு. ஆனால் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் பொறுப்பு அப்படியானது அல்ல என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இன்று நாடு முழுவதும் ‘தணிக்கை தினம்’ முதன் முறையாக கொண்டாப்படுகிறது. சிஏஜி-யின் வரலாற்று தோற்றத்தை குறிக்கும் வகையிலும், கடந்த பல ஆண்டுகளாக வெளிப்படையான பொறுப்புடைமை மிக்க நிர்வாகத்துக்கு உதவி வருவதைக் குறிக்கும் வகையிலும் தணிக்கை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. சிஏஜி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் பிரதமர் மோடி சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை திறந்து வைத்து  சிறப்புரையாற்றினார்.

சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

அப்போது, “காலப்போக்கில் வலுவாகவும், முதிர்ச்சியடைந்ததாகவும், மிகவும் பொருத்தமானதாகவும் மாறும் நிறுவனங்கள் மிகக் குறைவு. ஆனால் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் பொறுப்பு அப்படியானது அல்ல” என்று சிஏஜி-க்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

மேலும், “ஒரு காலத்தில் சிஏஜி பயத்துடனும், சந்தேகத்துடனம் தணிக்கை செய்திருந்தது. ஆனால் தற்போதைய நிலைமை அப்படியல்ல. நிலைமை மாறியுள்ளது. தணிக்கையானது மதிப்பு கூட்டுதலின் முக்கிய பகுதியாக இன்று கருதப்படுகிறது.” என்றும் கூறியுள்ளார்.

“தணிக்கை நாள்“ கொண்டாட்டத்தில் உரையாற்றிய தற்போதைய தலைமைக் கணக்கு தணிக்கையாளர் ஜி.சி.முர்மு

கடந்த 1860ம் ஆண்டு நவ.16ம் வங்கம், மதராஸ், பாம்பே என அப்போதைய மூன்று மாகாணங்களை ஒன்றினைத்து முதன் முறையாக ஆடிட்டர் ஜெனரல் நியமிக்கப்பட்டார். இதன் நினைவாக இன்று, முதல் ‘தேசிய தணிக்கை’ தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த விழாவில் பிரதமர் மோடியுடன் தற்போதைய தலைமை கணக்கு தணிக்கையாளர் ஜி.சி.முர்மு உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.