சட்டப்பேரவை கூட்டத்தொடர் 17-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கூட்டப்படவேண்டும். அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் சட்டப்பேரவை கூட்டம் கூட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து வருகிற 17-ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த சட்டப்பேரவை கூட்டத்தில் மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, உள்ளிட்ட விவகாரங்களை கையில் எடுக்க முடிவு செய்துள்ளது அதிமுக. மேலும், அமைச்சர்களின் நடவடிக்கைகள் பற்றியும் சட்டசபையில் அதிமுக விவாதம் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல, ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை அறிக்கை ஆகியவை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடர்பான அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், இதில், சட்டப்பேரவை கூட்டத் தொடரில் விவாதிக்கப்படும் முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-இரா.நம்பிராஜன்