அரியலூர் அருகே விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதாகத் தகவல் பரவியதால் 4 கிராம மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தின் இணைப்பு பகுதியான முல்லையூர், வங்காரம், தளவாய், குழுமூர் போன்ற கிராமங்கள் உள்ளன இக்கிராமத்தில் காலை 11 மணி அளவில் ஒரு ஹெலிகாப்டர் சென்ற சத்தம் கேட்டதாகவும் அதன் பின்னர் திடீரென சுற்றியுள்ள ஒரு பத்து கிலோமீட்டர் தூர அளவில் கேட்கும் அளவில் சத்தம் கேட்டதாகக் கூறப்படுகிறது. அதனால், மேலே சென்றதாகக் கூறப்படும் அந்த ஹெலிகாப்டர் தான் வெடித்துச் சிதறி இருக்கும் எனப் பகுதியில் செய்தி பரவியதாகவும், அதனால் அந்த கிராம மக்கள் அந்த பகுதியில் ஏதேனும் விபத்து ஏற்பட்டுள்ளதா எனத் தேடிப் பார்த்ததாகச் சொல்லப்படுகிறது.
அண்மைச் செய்தி: ‘அதிமுக பொதுக்குழு; விசாரணைக்கு வரும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு?’
இந்த சம்பவம் பெரிதாகப் பேசப்பட்டதால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 3 ஆம்புலன்ஸ்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அங்கு எவ்வித தகவலும் இல்லாததால் அந்த ஆம்புலன்ஸ்கள் சிறிது நேரத்தில் திரும்பி சென்றதாகச் சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவிக்கையில் குழுமூர் பகுதியில் சத்தம் கேட்டதாகக் கூறப்படுவதுபோல் எந்த நிகழ்வும் நடைபெற வில்லை என அவர் கூறியுள்ளார்.








