புதுச்சேரியில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மானியம் – அரசாணை வெளியீடு

புதுச்சேரியில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாதம் ரூ.300 மற்றும் ரூ.150 மானியம் வழங்குவதற்காக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் மாதம் ஒரு வீட்டு உபயோக சிலிண்டருக்கு ரூ.300…

புதுச்சேரியில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாதம் ரூ.300 மற்றும் ரூ.150 மானியம் வழங்குவதற்காக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் மாதம் ஒரு வீட்டு உபயோக சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்கப்படும் என கடந்த சட்டப்பேரவை  கூட்டத்தொடரில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார்.

அதன்படி வறுமைவறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப அட்டை தாரர்களுக்கு மாதம் ஒரு சிலிண்டருக்கு 300 ரூபாயும், வறுமை கோட்டிற்கு மேல் உள்ள குடும்ப அட்டை  தாரர்களுக்கு மாதம் ரூ.150 ரூபாயும் வழங்க துணை நிலை ஆளுநர் தமிழிசை ஒப்புதல்  அளித்தார். இதனைத்தொடர்ந்து அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அரசாணை அரசிதழில் வெளியிடப்பட்டவுடன் உடனடியாக அமலுக்கு வரும் எனவும், இந்த மானியத்தொகை அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் எனவும் புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.