சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு! பயணியிடம் இருந்து ஏகே 47 துப்பாக்கி தோட்டா பறிமுதல்!

சென்னை விமான நிலையத்தில் பயணி ஒருவரிடம் இருந்து ஏகே 47 துப்பாக்கியின் தோட்டா பறிமுதல் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற இந்தியர் ஒருவர் தமிழ்நாட்டில் உள்ள தனது பாட்டியை பார்த்து விட்டு…

சென்னை விமான நிலையத்தில் பயணி ஒருவரிடம் இருந்து ஏகே 47 துப்பாக்கியின்
தோட்டா பறிமுதல் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற இந்தியர் ஒருவர் தமிழ்நாட்டில் உள்ள தனது
பாட்டியை பார்த்து விட்டு விமானம் மூலம் சிங்கப்பூர் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தார்.

அப்போது அவரின் உடமைகளை சி.ஐ.எஸ்.எப் அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். இப்போது எச்சரிக்கை மணி ஒலித்தது இதில் சந்தேகம் அடைந்த சி.ஐ.எஸ்.எப் போலீசார் உடனடியாக அவரின் உடமைகள் அனைத்தையும் பரிசோதனை மேற்கொண்டனர்.

அப்போது ஏகே 47 துப்பாக்கியில் பயன்படுத்தக்கூடிய ஒரு தோட்டா இருப்பது
கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து அவர் உடனடியாக சென்னை விமான நிலைய காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.

பின்னர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற இந்தியரான கௌரி கிருஷ்ணன் (வயது-20 ) என்பது தெரியவந்தது. இந்நிலையில் போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.