தென்ஆப்பிரிக்காவில் பேருந்து விபத்து – 42 பேர் உயிரிழப்பு!

தென் ஆப்பிரிக்காவில் பேருந்து விபத்தில் சிக்கி 42 பேர் உயிரிழந்துள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவின் ஈஸ்டர்ன் கேப் பகுதியில் இருந்து பிரிட்டோரியா தலைநகரில் உள்ள லூயிஸ் டிரைகார்ட் நகர் அருகே பேருந்து ஒன்று சென்றுள்ளது. இந்த நிலையில் அந்த பேருந்து மலைப்பாங்கான பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து விலகி பள்ளத்தில் உருண்டு விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்து தலைகுப்புற கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கி பயணிகள் உள்ளிட்ட 42 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் பலர் ஜிம்பாப்வே மற்றும் மாளவி நாடுகளை சேர்ந்த பலர் உள்ளனர். இதனை தொடர்ந்து தகவல் அறிந்த அவசரகால குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ள நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.