குப்பை கிடங்கில் 2வது நாளாக பற்றி எரியும் தீ

சென்னை பெருங்குடி குப்பை கிடங்கில் 2-வது நாளாக எரிந்து வரும் தீயை கட்டுப்படுத்த, தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். சென்னை பெருங்குடி குப்பை கிடங்கில் நேற்று மாலை தீ விபத்து ஏற்பட்ட நிலையில், நேற்றிரவு…

சென்னை பெருங்குடி குப்பை கிடங்கில் 2-வது நாளாக எரிந்து வரும் தீயை கட்டுப்படுத்த, தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

சென்னை பெருங்குடி குப்பை கிடங்கில் நேற்று மாலை தீ விபத்து ஏற்பட்ட நிலையில், நேற்றிரவு முதல் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். இதன் காரணமாக குப்பை கிடங்கை சுற்றியுள்ள வேளச்சேரி குடியிருப்புகள், ராஜீவ் காந்தி ஐஐடி எக்ஸ்பிரஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் கரும்புகை சூழ்ந்துள்ளது.

இதனால், சுவாசக்கோளறு ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதிமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும், 2-வது நாளாக இன்றும் நடைபெற்று வரும் தீ அணைப்பு பணியில் 135 தீயணைப்புதுறை வீரர்களும், குப்பை கிடங்கில் பணியாற்றும் 500க்கும் மேற்பட்ட ஊழியர்களும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீவிபத்தை முழுவதுமாக கட்டுப்படுத்த 3 நாட்கள் ஆகும் என தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்மைச் செய்தி: பேரறிவாளன் விடுதலை; காங்கிரசுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை – காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் 

நேற்று தஞ்சாவூர், களிமேடு அப்பர் குருபூஜை தேர் பவனியின்போது உயர் மின் அழுத்த கம்பியில் தேர் உரசிய விபத்தில் 2 சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். அதனைத்தொடர்ந்து, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சர்ஜிகல் பிளாக்கில் தீ விபத்து ஏற்பட்டது. அதில் நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. இந்நிலையில், நேற்று மாலை சென்னை பெருங்குடி குப்பை கிடங்கில் தீ பற்றியது, இந்த தொடர் தீ விபத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.