இந்தி மொழி குறித்து பாலிவுட் மற்றும் கன்னட நடிகர்களின் விவாதம் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
கேஜிஎஃப்-2 திரைப்படத்தின் வெற்றி குறித்து விழா ஒன்றில் பேசிய கன்னட நடிகர் கிச்சா சுதீப், இனிமேலும் இந்தி மொழியை தேசிய மொழி என சொல்ல வேண்டாம் எனக் கூறினார். இதற்கு ட்விட்டரில் பதிலளித்த பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், எப்போதும் இந்தி தான் நமது தாய் மொழியாகவும் தேசிய மொழியாகவும் இருக்கும் என்று இந்தியில் குறிப்பிட்டார்.
இதற்கு விளக்கம் அளித்த கிச்சா சுதீப், நாங்கள் இந்தி மொழியை நேசித்து கற்றுக்கொணடதால் நீங்கள் இந்தியில் அனுப்பிய பதிவு எனக்கு புரிந்தது என்றும், ஆனால் உங்கள் கேள்விக்கு எனது பதிலை கன்னட மொழியில் பதிவு செய்திருந்தால் நிலைமை என்னவாகும் என்றும் கேள்வி எழுப்பினார்.
இந்த பதில் இணையத்தில் வைரல் ஆனது. பின்னர் ட்விட்டரில் பதிலளித்த அஜய் தேவ்கன், தான் எப்போதும் சினிமா துறையை ஒன்றாகத்தான் நினைப்பதாகவும், அனைத்து மொழிகளையும் மதிப்பதாகவும் தெரிவித்தார். அண்மை காலமாக இந்தி மொழி குறித்த கருத்துகள் சர்ச்சையாகி வரும் சூழ்நிலையில் பாலிவுட் மற்றும் கன்னட நடிகர்களின் விவாதம் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.









